ஒன்றிய அரசு தகவல் கொரோனா மருந்துகளுக்கு ரூ.36,397 கோடி செலவு

புதுடெல்லி: கொரோனா மருந்துகளை இலவசமாக வழங்க ஒன்றிய அரசு ரூ.36,397 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: தேசிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தடுப்பூசிகளை வாங்குவதற்கு இந்திய அரசு இன்று வரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளது. 2024 ஜூலை 29 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 220.68 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 30 கோடி டோஸ் தடுப்பூசிகளை 99 நாடுகள் மற்றும் இரண்டு ஐநா அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளது. பயோடெக்னாலஜி துறை,பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.533.3 கோடியை வழங்கி உள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க ரூ. 158.4 கோடி வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்க சுமார் ரூ.60 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசு தகவல் கொரோனா மருந்துகளுக்கு ரூ.36,397 கோடி செலவு appeared first on Dinakaran.

Related Stories: