திருப்பதி உண்டியல் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவரின் சொத்து பட்டியல் தாக்கல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த முன்னாள் தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர் பல ஆண்டுகளாக ரூ.100 கோடி வரை திருடியது தெரியவந்தது. பின்னர் லோக் அதாலத் தீர்வு மூலம் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகளை தேவஸ்தானத்துக்கு எழுதி வாங்கப்பட்டது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி வந்ததும், மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த இடைக்கால அறிக்கையை (ஊழல் தடுப்புப் பிரிவு) டி.ஜி. ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையைப் பெற்ற ஆந்திர உயர் நீதிமன்றம், அதை விரிவாக ஆராய்ந்த பிறகு பொருத்தமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆந்திர உயர் நீதிமன்றம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 5க்கு ஒத்தி வைத்துள்ளது.

Related Stories: