அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்து வந்த பிஸ்வா பந்து சென்(72) பெருமூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சென் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். பிஸ்வா பந்து சென் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
