அலிகார் பல்கலையில் புகுந்து ஆசிரியர் சுட்டுக்கொலை: சிசிடிவி காட்சிகள் வைரல்

அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகம் அருகே தனது சக ஊழியர்கள் இருவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் டானிஷ் அலியை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related Stories: