ராஜஸ்தானில் கொடூரம் ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்: பெண் உயர் அதிகாரி உள்பட 3 பேர் கைது

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இயங்கி வரும் தனியார் ஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜிதேஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை(டிச.20) தன் பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் ஐடி நிறுவன பெண் மேலாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு வரை நீடித்த விருந்து நிகழ்ச்சியில் மதுபானங்களும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

விருந்து முடிந்த பிறகு, பெண் மேலாளரை வீட்டில் இறக்கி விடுவதாக ஐடி நிறுவனத்தின் மற்றொரு பெண் உயரதிகாரி கூறி உள்ளார். இதையடுத்து பெண் மேலாளர் அந்த காரில் ஏறியபோது, காருக்குள் ஜிதேஷ் சிசோடியா, பெண் உயர் அதிகாரியின் கணவர் கவுரவ் சரோஹி ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியாவும், கவுரவ் சரோஹியும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜிதேஷ் சிசோடியா, கவுரவ் சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயரதிகாரி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related Stories: