பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு அரண்மனை எதிரே சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி: என்ஐஏ விசாரணை

மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தின் மார்த்தாண்ட வாசல் அருகே நேற்று முன்தினம் இரவு ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக, என்ஐஏ விசாரணை நடத்தியது. மைசூரு அரண்மனை எதிரில் நேற்று முன்தினம் இரவு பலூனுக்கு ஹீலியம் காஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் பலூன் விற்பனையில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த சலீம் (44) என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும், பெங்களூருவை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் மஞ்சுளா என்ற பெண் நேற்று உயிரிழந்தார். அரண்மனை எதிரிலேயே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைசூரு போலீஸ் கமிஷனர் சீமாலாட்கர் உட்பட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணையை மேற்கொண்டனர். வெடிவிபத்தின் தீவிரத்தை அறிந்த தேசிய புலனாய்வு குழுவினரும் அந்த இடத்திற்கு சென்று பல்வேறு பரிமாணங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: