எச்1பி விசா நேர்காணல் ரத்து அமெரிக்காவிடம் இந்தியா கவலை

புதுடெல்லி: எச்1பி விசா நேர்காணல் ரத்து தொடர்பாக அமெரிக்காவிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் இருந்து விண்ணப்பித்து இருந்தவர்களின் முன்கூட்டி திட்டமிடப்பட்டு இருந்த எச்ஒன்பி விசா நேர்க்காணல்களை அமெரிக்கா திடீரென ரத்து செய்துள்ளது. இந்த மாதத்தில் எச்ஒன்பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல்கள், அவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஆன்லைன் சுயவிவரங்கள் கடந்த வாரம் ஆய்வு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் இந்திய அரசுக்கு வந்துள்ளன. இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், ‘விசா தொடர்பான பிரச்னைகள் எந்தவொரு நாடாக இருந்தாலும் அதன் இறையாண்மைக்கு உட்பட்டவை.

இந்த பிரச்னைகளையும், எங்களது கவலைகளையும் அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்துள்ளோம். இந்திய குடிமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்காக இந்திய அரசு அமெரிக்க அரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது’என்றார்.

 

Related Stories: