லண்டனில் சிட்டாடல் பிரீமியர்: சமந்தா பங்கேற்பு

லண்டன்: அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூஸ்ஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ வழங்கும் வெப்தொடரான ‘சிட்டாடல்’ பிரீமியர் காட்சிக்காக, உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நட்சத்திரங்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர். வரும் 28ம் தேதி பிரைம் வீடியோவில் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘சிட்டாடல்’ ஒளிபரப்பாக தயாரான நிலையில், முன்னணி நடிகர்கள் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவில், நிர்வாக தயாரிப்பாளர்கள் ஜோ, அந்தோணி ரூஸ்ஸோ, டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில் பங்கேற்றனர். அதிரடி காட்சிகள் நிறைந்த ஸ்பை யுனிவர்ஸின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ், டிகே மற்றும் ‘சிட்டாடல்’ இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன் ஆகியோருடன் வருண் தவான், சமந்தா உள்பட அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இத்தாலி வெளியீட்டில் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் மற்றும் ஷோ ரன்னர்கள் மாடில்டா டி ஏஞ்சலிஸ், ஜினா கார்டினி ஆகியோர் லண்டன் பிரீமியரில் பங்கேற்றனர். 6 எபிசோடுகள் கொண்ட இத்தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்வில்லே நடித்துள்ளனர். 2 எபிசோடுகள் வரும் 28ம் தேதி வெளியாகும். வரும் மே 26ம் தேதி வரை வாரந்தோறும் ஒரு எபிசோடு வெளியாகும். இத்தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இதர மொழிகளில் வெளியாகிறது.

The post லண்டனில் சிட்டாடல் பிரீமியர்: சமந்தா பங்கேற்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: