அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் சிங்கப்பூர் போல தமிழ்நாட்டிலும் நவீன பூங்கா

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வேளாண்மைத் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான பணிகளுக்காக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் முதன்மை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் சென்றனர்.

இந்த பயணத்தின் ஒரு அங்கமாக நேற்று சிங்கப்பூர் நகரில் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விரிகுடாவின் தோட்டங்கள் என்ற பூங்காவினை அமைச்சர் பார்வையிட்டார். இந்தப் பூங்காவில் மெரினா தெற்கில் உள்ள பே சவுத் கார்டன், மெரினா கிழக்கில் நிறுவனர்களின் நினைவகத்துடன் கூடிய பே ஈஸ்ட் கார்டன் மற்றும் டவுன்டவுன் கோர் மற்றும் கல்லாங்கில் உள்ள பே சென்டரல் கார்டன் ஆகிய மூன்று நீர்முனைத் தோட்டங்களைப் பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்களை அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள பே சவுத் கார்டனில் அமைந்துள்ள மலர் குவி மாடமான உலகின் மிகப்பெரிய கண்ணாடி பசுமை இல்லத்தையும் பார்வையிட்டனர். இப்பூங்காவிலுள்ள அதிக ஆற்றல், பயன்பாட்டுத்திறன் கொண்ட கட்டடத் தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் கண்ணாடி வீட்டினையும் வானிலைக் கல்விக்கான விரிவாக்க மையத்தினையும் பார்வையிட்டார்.

சிங்கப்பூர் பூங்காவில் பின்பற்றப்படும், அதிக ஆற்றல், பயன்பாட்டுத்திறன் கொண்ட கட்டடத் தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் கண்ணாடி வீட்டினையும் வானிலைக் கல்விக்கான விரிவாக்க மையம் தொடர்பான சிறப்பம்சங்களை தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்களில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் ஆணையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

The post அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் சிங்கப்பூர் போல தமிழ்நாட்டிலும் நவீன பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: