வீட்டுமனை முறைகேடு முதல்வர் சித்தராமையா மீது புகார்

பெங்களூரு: : மைசூரு நகரவளர்ச்சி குழும வீட்டுமனை முறைகேடு தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி எச்.எம்.பார்வதி உள்ளிட்ட 6 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசில் பாஜவின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜ நிர்வாகி என்.ஆர்.ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, ‘மைசூரு நகர வளர்ச்சி குழுமத்தில்(மூடா) மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. விதிகள் மீறி, முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.46 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி 38,284 சதுர அடி நிலத்தை விதிகள் மீறி ெபற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post வீட்டுமனை முறைகேடு முதல்வர் சித்தராமையா மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: