2014 தேர்தலுக்கு முன் எனது தந்தையை சந்திக்க ராகுல் மறுத்து விட்டார்: சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பீகாரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அதன்பின்னர் 2014ல் வெளியேறி பா.ஜவுடன் இணைந்தது. தற்போது ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி பா.ஜ கூட்டணியில் உள்ளது. சிராக் பாஸ்வான் தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 2014ல் விலகியது ஏன் என்பது தொடர்பா சிராக் பாஸ்வான் கூறியதாவது: நானும், எனது தந்தையும் சோனியா காந்தியை அடிக்கடி சந்தித்து காங்கிரஸ் கூட்டணியில் எங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதித்தோம்.

அப்போது சோனியா காந்தி, எனது தந்தையிடம் ராகுல்காந்தியை சந்திக்குமாறு பரிந்துரைத்தார். 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பு 3 மாதங்களாக முயன்றும் ராகுல் காந்தி எனது தந்தையை சந்திக்க மறுத்து விட்டார். மோடி மீதான அபிமானம் மற்றும் மரியாதை காரணமாக பா.ஜ கூட்டணியில் இணைய நான் வற்புறுத்தினேன். தற்போது அரசியல் குறித்த ராகுல் காந்தியின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 2014 தேர்தலுக்கு முன் எனது தந்தையை சந்திக்க ராகுல் மறுத்து விட்டார்: சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: