ரூ.1 லட்சம் லஞ்சம்; மி.வா. அதிகாரிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர், ஐஸ் பிளாண்ட்டிற்கு பிரதம மந்திரி சூரிய மின்சார திட்ட தடையில்லா சான்று கோரி, அறந்தாங்கி அருகே நாகுடி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனனிடம் விண்ணப்பிதார். அவர் தடையில்லா சான்றுக்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்க நாராயணசாமி, ரூ.1.75 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று ரூ.1லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த போலீசார் பிருந்தாவனனை கைது செய்தனர். இதேபோல் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா கவரப்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கராசுவிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தொட்டியம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திருமாறன் இளையநம்பியும் (48) கைது செய்யப்பட்டார். ஆர்.ஐ.பிடிபட்டார்: தென்காசி அடுத்த மத்தளம்பாறையைச் சேர்ந்த கார் டிரைவர் கதிரேசனின் 2 சென்ட் நிலத்துக்கு தரிசுநில சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தென்காசி வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் கைது செய்யப்பட்டார்.

சர்வேயர்-இடைத்தரகர் சிக்கினா்: திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவு சர்வேயர் பாக்கியராஜ் (37). இவரிடம் வீட்டிற்கு தனி பட்டா கேட்டு மனு செய்த திண்டுக்கல் ஆர்எம் காலனியை சேர்ந்த கணேஷ் குமாரிடம், ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். நேற்று பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சர்வேயர் பாக்கியராஜ், இடைத்தரகராக செயல்பட்ட சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர்.

வருவாய் ஆய்வாளர் கைது: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி(62) என்பவருக்கு வாரிசு சான்று வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் கைது செய்யப்பட்டார்.  இதோபோல் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலையில் முருகதாஸ் என்பவருக்கு சொந்தமான மரபட்டறைக்கு மின் இணைப்பு பெற ரூ.2000 லஞ்சம் வாங்கிய லைன் மேன் பலராமன் (50) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

The post ரூ.1 லட்சம் லஞ்சம்; மி.வா. அதிகாரிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: