செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் (எ) அசால்ட்(24). மீனவர். கடந்த 20ம் தேதி மாரிசெல்வத்திற்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மாரிசெல்வத்தின் செல்போனை உடைத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், பிரபு என்பவரது செல்போனை பறித்து கடலில் வீசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவே மாரிசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற சிலர், அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி முதல் மாரிசெல்வத்தை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில், தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. மாரிசெல்வம் என்ற அசால்ட், கடந்த 21ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் வந்து கொண்டிருந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கியது. அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடி உள்ளார்.

இருப்பினும் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி செங்கலால் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கும்பல் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டது தெரிய வந்துள்ளது. மாரிசெல்வம் புதைக்கப்பட்ட இடத்தை சிறுவன் அடையாளம் காட்டினான். இன்று அந்த இடத்தில் விஏஓ முன்னிலையில் மாரிசெல்வத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை ேபாலீசார் ேதடி வருகின்றனர்.

The post செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: