சென்னானூர் அகழாய்வில் இரும்பு கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கிருஷ்ணகிரி சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கொழுமுனையின் எடை 1.292 கிலோ, நீளம் 32 செ.மீ., அகலம் 4.5 செ.மீ., தடிமன் 3 செ.மீ. கொண்டுள்ளது. பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழுமுனையாக பயன்பட்டிருக்கலாம். முழுமையான ஆய்வுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ள கொழுமுனை எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறியமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

The post சென்னானூர் அகழாய்வில் இரும்பு கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: