1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை : மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலை., அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்றால் மற்ற -c யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையே. அங்குள்ள அனைத்து வீடுகளிலும் நேரடியாக கேட்டு வருகிறோம்; யாருக்கும் பாதிப்பில்லை. சைதாப்பேட்டை சிறுவன் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை 2 நாட்களில் வந்துவிடும். இன்று முதல் ஆக.31 வரை வயிற்றுப்போக்கு தடுப்பு, A வைட்டமின் முகாம் நடைபெறும்.

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்.”மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலை., அழைப்பு விடுத்துள்ளது. ஹார்வேர்ட் பல்கலை.,யில் ‘மக்களை தேடி மருத்துவம்” குறித்து மாணவர்களிடம் உரையாற்ற உள்ளேன். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: