கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 129 பேர் டிஸ்சார்ஜ்: 32 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த 129 பேர் நலமுடன் வீடு திரும்பினர். மேலும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம்தேதி விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 64 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தவிர கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 13 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 8 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 32 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் (67), இளையராஜா (40), நாராயணன் (‘60), பாவாடை (53) ஆகிய 4 பேரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர்களை பார்த்து வருவதாக கூறி விட்டு வெளியில் சென்ற 4 பேரும் பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பி வரவில்லை. ஒரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமலேயே 4 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள். ெமாத்தமுள்ள 64 பேரில் இங்கு மட்டும் 38 பேர் பலியாகி உள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 129 பேர் டிஸ்சார்ஜ்: 32 பேருக்கு தொடர் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: