மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியக்குழு கூட்டம்

 

கரூர், ஜூன் 26: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். ஒன்றிய செயலாளர் ராஜா முகமது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமாரசாமி, ஆறுமுகம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆறு மாத காலமாக க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதனால், கிராமப்புற மக்கள் பொருளாதார நெருக்கடியில் உளனர். எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரூர் கோவை நெடுஞ்சாலையில் தென்னிலை அருகே உள்ள வைரமடை பஸ் நிறுத்தத்தில் கரூர், கோவை, கரூர், திருப்பூர் செல்லும் அனைத்து புறநகர் பேரூந்துகளையும் நிறுத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: