மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மாற்றுதிறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

கரூர், டிச.30: மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மாற்றுதிறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை வந்து, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை மனுக்களும், கனிவுடன் பெறப்பட்டு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார். இதனடிப்படையில், அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கையுடன் வந்து இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், நேற்று கருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 397 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 33 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த முகாமில், தமிழர் தேசிய கட்சியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள கள்ளை பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் வழியாக பாதையை மணிகவுண்டம்பட்டி, தொட்டியப்பட்டி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள மக்கள் கடந்த பல ஆண்டுகளாக வண்டிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழங்கிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, வெள்ளியணை பகுதியில் சாலையோரம் மதுபான கடைகள் செயல்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதிச் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. எனவே, துறை அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம், பாதையை ஆக்ரமித்து தடுப்பு சுவர் அமைத்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3825 மதிப்பிலான காதொலி கருவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1996 மதிப்பிலான பிரைலி கைக்கடிகாரத்தினையும், 1 பயனாளிக்கு தொழில் தொடங்குவதறக்கான வங்கிக் கடன் மானியமாக ரூ.25 ஆயிரத்திற்கான உத்தரவையும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ, 38,471 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் வழங்கினார். இந்த முகாமில், திட்ட இயக்குநர் வீரபத்திரன், கோட்டாட்சியர் முகமது பைசல், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோகரன், உதவி இயக்குநர் (நில அளவை) முத்துச்செல்வி, உதவி திட்ட அலுவலர் செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: