தோகைமலை, டிச.27: தகாத வார்த்தையில் பேசியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை சத்திர தெரு பழனிவேல் மகன் ராமலிங்கம் (65). இதேபோல் அதேபகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் மனைவி நித்யா (33).
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமலிங்கம் தனது வீட்டில் இருந்து உள்ளார். அப்போது நித்யா, ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுகுறித்து ராமலிங்கம் தோகைமலை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசர் நித்யா மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
