ஐந்தாவது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர், டிச. 24: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தமிழ்நாடு எம்ஆர்பி நர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு அசோசியேஷன் நிர்வாகி விஜயலட்சுமி உட்பட அனைத்து உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சென்னை சேப்பாக்கத்தில் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்த சம்பவத்தை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: