வேலூர், டிச.8:அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அரக்கோணம் அருகே அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று தலை சிதறிய நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ஹரிசங்கர் கொடுத்த தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பத்மராஜா மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
