வேலூர், டிச.8: நெல் பயிரைத் தாக்கும் புகையான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கினால் விளைச்சல் பாதிக்கும். பயிரின் அடிப்பாகத்தில் பூச்சிகள் மற்றும் குஞ்சுகள் காணப்படும். பயிர்கள் மஞ்சளாக மாறி, பிறகு பழுப்பு நிறமாகி, கருகியது போல் தோன்றும்.
தாக்கப்பட்ட பயிர்கள் வலுவிழந்து, சாயும். பால் பிடிப்பதில்லை, கதிர்கள் பாதிக்கும், வயலில் ஆங்காங்கே வட்ட வடிவமாகத் தாக்கப்பட்ட பகுதிகள் காணப்படும்.நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டி கொண்டிருக்கும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து ‘தீய்ந்த மாதிரி’ காட்சியளிக்கும். இந்த பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்புகிறது.
