தொண்டியக்காடு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 22: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இக்கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கமலா பூவாணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தலைமையாசிரியர் (பொறுப்பு) செல்வராசு, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழாசிரியர் சாந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி பள்ளி செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் செய்யப்பட்டது.

பலரும் தங்களது கருத்துக்களை கூறி பேசினார்கள். அப்போது சென்னையில் உள்ள மாதிரி பள்ளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட2வது மாணவி பிரியதர்ஷினிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பொன்னாடை போர்த்தினார். சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த பத்தாம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவியின் பெற்றோரிடம் ஜெயஸ்ரீ சாமி நாதா கல்விப் பரிசு ரூபாய் ஆயிரம் இப்பள்ளியின் பணிநிறைவு ஆசிரியர் மனோகரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

The post தொண்டியக்காடு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: