சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை: மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் பிஸ்கட் தந்தபோது தெரு நாய் கடித்துள்ளது; எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன், தெருநாய்களை கண்டதும் அவற்றிற்கு பிஸ்கட் போட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனை அந்நாய்கள் கடிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது சிறுவன் அலறியபோதும் விடாமல் அவை கடித்துக் குதறின. சிறுவனின் முகம், தோள்பட்டையில் தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

The post சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய் appeared first on Dinakaran.

Related Stories: