பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர் பணம் தராததால் வேதனை: ஆவடியில் சாலையில் நிறுத்தி தனது பைக்கை கொளுத்தியவர் கைது

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் தவணைப்பணம் பெற்றோர் தராததால் இளைஞர் ஒருவர் ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கை தீ இட்டு கொளுத்தினர். ஆட்டோ ஓட்டுனரின் மகனான முகேஷ் வேளைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தனது இருசக்கர வாகனத்திற்கு மாத தவணை செலுத்த பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். 33 வயதாகியும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் முகேஷின் பெற்றோர் பணம் தர மறுத்து கடுமையாக பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தனது பைக்கை பருத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி பெற்றோர் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் சாலையில் சிரிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாக பைக் முழுவதுமாக தீக்கிரையானது. இதை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் பைக்கை வைத்து எரித்த முகேஷை போலீசார் கைது செய்தனர்.

The post பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர் பணம் தராததால் வேதனை: ஆவடியில் சாலையில் நிறுத்தி தனது பைக்கை கொளுத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: