தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சசிகாந்த் செந்தில் எம்பி

ஆவடி: தமிழகத்திலேயே அதிக வித்தியாசத்தில் நாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் தொகுதி ஆவடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சசிகாந்த் செந்தில் எம்பி, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று ஆவடி தொகுதி மக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு, ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்த பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்து பின் சசிகாந்த் செந்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது வெற்றி பெற்ற பின் மீண்டும் பச்சையம்மன் ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்தார். பின்னர் கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிறகு வாக்களித்த பொதுமக்களுக்கு ஆவடி முழுவதும் வாகனத்தில் பேரணியாக சென்று நன்றி தெரிவித்தார். இறுதியாக பட்டாபிராம் பகுதியில் நிறைவு செய்தார். போகும் வழியெங்கும் வேட்பாளர் அவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

The post தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சசிகாந்த் செந்தில் எம்பி appeared first on Dinakaran.

Related Stories: