செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சிதிலமடைந்த கால்வாய் சிலாப்புகள்: உடனே சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணிவரை எந்த நேரமும் பயணிகள் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.

பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்தில் பேருந்துநிலைய கழிவறை உள்ளது. இங்கிருந்து கழிவுகள் வடியக்கூடிய சிறுவடிகால் பேருந்து நிலையத்தினுள் கட்டப்பட்டு பல வருடங்களாகிறது. அந்த வடிகால் சிலாப்புகள் சரிவர மூடப்படாமல் இரண்டடி முதல் மூன்றடி கொண்ட பள்ளங்களாக சிதிலமடைந்து பேருந்து நிலையத்தில் ஆபத்தான சூழ்நிலையில் காட்சியளிக்கின்றன.

இந்த பள்ளங்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அடிக்கடி விழுந்து காயமடைந்துள்ளனர். இந்த பள்ளங்களில் மேலும் மேலும் பயணிகள் விழுந்துவாரும் அபாயம் இருப்பதால் இதுகுறித்து நகராட்சிக்கு நிர்வாகம் ஆய்வு நடத்தி பயணிகளின் நலன் கருதி அந்த பள்ளங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சிதிலமடைந்த கால்வாய் சிலாப்புகள்: உடனே சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: