கேளம்பாக்கம் அருகே கல்குட்டையில் ஆண் சடலம் மீட்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தில், செல்லியம்மன் நகர் பகுதியில் கைவிடப்பட்ட கல்குட்டை உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக இந்த கல்குட்டையில் நீர் நிரம்பி உள்ளது. நேற்று பிற்பகல் சிலர் அங்கு சென்றபோது கல்குட்டையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் மிதந்து கிடந்தது. இதையடுத்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை வெளியே எடுத்து பார்த்தனர்.

அந்த நபர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும். அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு சடலத்தை யாரேனும் வீசிச் சென்றார்களா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என தாழம்பூர் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

The post கேளம்பாக்கம் அருகே கல்குட்டையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: