அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூன் 16: அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பேரவை கூட்டம் அம்மாபேட்டையில் உள்ள துளசி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும், ஒன்றிய பொருளாளர் தாமரைச்செல்வி முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சி உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. கூட்டத்தில், அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: