2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தோல் ஏற்றுமதி கவுன்சில், கான்படெரேஷன் ஆப் அபர்மேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக, புதிய சிட்கோ தொழிற்பேட்டை கோரிக்கைகள், ஜிஎஸ்டி ஆலோசகர்கள் நியமனம், எஸ்சி/எஸ்டி கொள்முதல் கொள்கை, சிட்கோ, தொழிற்பேட்டைகளுக்கு பேருந்து வசதி, எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோர்களுக்கு சிட்கோ தொழில்மனை ஒதுக்கீடு அதிகரித்தல் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

தொழிற்கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், மதுமதி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்யா நீலம், உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: