இந்து சமய அறநிலையதுறையை இந்து தமிழர் அரசமையங்கள் நிலைய துறை என பெயர் மாற்ற கோரிக்கை

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று மாலை நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசியதாவது: தெய்வீக மரபு சார்ந்த பெரியவர்களால் அல்லது மன்னர்களால் எண்ணாயிரம் சமணர்களை கழிவிலேற்றப்பட்ட செய்தியை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பவுத்தமும் சமணமும் தமிழை வளர்த்த அரசமையங்கள் என்கிறார் பேரறிவாளர் அயோத்திதாச பண்டிதர். எனவே தனித்துவமான சமண பவுத்த பண்பாட்டு துறை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட வேண்டும். அதேபோல இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரை மாற்றி, இந்து தமிழர் அரசமையங்கள் நிலைய துறை என்ற பெயரை அரசு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். தமிழர் பண்பாட்டு மீட்பு குழு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘உறுப்பினரின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’’ என கூறினார்.

The post இந்து சமய அறநிலையதுறையை இந்து தமிழர் அரசமையங்கள் நிலைய துறை என பெயர் மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: