கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தனியார் வாகனங்களில் வழக்கறிஞர், மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது எனகாவல் துறை அறிவித்தது. இந்த அறிவிப்பிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் கே.னிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டிக்கரை பயன்படுத்த இடைக்கால அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கு குறித்து பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி, கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் பிரதாப், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி வைத்திருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

 

The post கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: