தமிழ்நாடு முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட உத்தரவு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஸ் தக்கர், பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராகவும் மற்றும் பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக இருந்த நந்தக்குமார், மனிதவளம் மேம்பாட்டுத்துறை செயலாளராகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனிதவளம் மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த நாகராஜன் நிதித்துறை (செலவினங்கள்) செயலாளராகவும், விடுப்பில் இருந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் மீண்டும் அதே துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நிர்வாக இயக்குநராக இருந்த சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகவும், தமிழ்நாடு சர்க்கரை ஆலை கழக நிர்வாக இயக்குநராக இருந்த விஜய்ராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளராகவும், சர்க்கரை ஆலை கூடுதல் ஆணையர் அன்பழகன், தமிழ்நாடு சர்க்கரை ஆலை கழக நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக இருந்த பிரேஜந்தர நவ்நீத், வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராகவும், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) சமீரன், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நிர்வாக இயக்குநராகவும், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் (பணிகள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரியாகவும், சேலம் மாவட்டம், கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவன செயல் இயக்குநராகவும், சகோசர்வ் நிர்வாக இயக்குநராக இருந்த லலித் ஆதித்யா நீலம், சேலம் மாவட்டம், கூடுதல் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: