பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களை வண்ண பலூன்கள், ரோஜா மலர்கள் கொடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்படும் இன்றே, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்து விலையில்லா நலத்திட்டப் பொருள்களும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: