ஒரேமுறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். கே.கோபால், முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் க.ஜோஷி நிர்மல் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் (சந்தை) ரெ. சதிஷ் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஒருமுறை கடைக்கு வருகை தந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்லும் வண்ணம் போதுமான அளவில் இன்றியமையா பொருட்கள் அனுப்புவது உறுதி செய்யப்பட வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பொருட்கள் பெறும் முறை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒரேமுறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: