பேரிடர் மீட்பு படை வீரர் தற்கொலை

அரக்கோணம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஒய்என் ராவ்(39). இவரது மனைவி வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். ஒய்என் ராவ் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதற்காக, குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளி விடுமுறையையொட்டி மனைவி வெங்கடலட்சுமி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு மனைவிக்கு ஒய்என் ராவ் போன் செய்து பேசியபடியே திடீரென கதவை தாழிட்டுக்கொண்டு போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினருக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது ஒய்என் ராவ் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

The post பேரிடர் மீட்பு படை வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: