மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘வரும் பேரவை தொடரில் அறிவிக்கப்படவுள்ள அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். அறிவிப்புகளின் நிலை குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

The post மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: