வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணி ஒத்திகை வேலூர் நாடாளுமன்ற தொகுதி

வேலூர், ஜூன் 4: தமிழகம், புதுச்சேரி என 40 நாடாளுமன்ற தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வேலூர் பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள், 29 இன்ஸ்பெக்டர்கள், 93 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் 690 பேர் உட்பட மொத்தம் 900 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கான ஒத்திகை வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

The post வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணி ஒத்திகை வேலூர் நாடாளுமன்ற தொகுதி appeared first on Dinakaran.

Related Stories: