வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!

சென்னை : மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்யுமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்சாரம் தடைப்பட கூடாது,” இவ்வாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

The post வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: