சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது

சென்னை: காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறியும் அறிக்கைக்கான கருத்துப் பட்டறை ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இப் பட்டறையில், சுப்ரியா சாகு பேசியதாவது:  காலநிலை திட்டங்கள் மூலம் மின்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதில் உள்ள வாழ்வாதார வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் காலநிலை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு கருத்துப் பட்டறை நடத்தப்படும். இது தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் ஊடகங்கள் மூலம் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் லலிதா, இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் ஷரண்யா அறி, சர்வதேச நிதி நிறுவன காலநிலையின் பசுமைக் கட்டடங்கள் மற்றும் நகரங்களுக்கான தலைமை தொழில் நிபுணர் பிரசாந்த் கபூர், செயல்பாட்டு அலுவலர் லொரைன் சுகர், நகர மேலாளர் பைசா சொலங்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: