மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை : மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மானூர், குப்பனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் பயிர்செய்துள்ளனர். வெண்டைக்காய் விதைகள் பாவிய மூன்று நாட்களில் செடிகள் முளைக்க துவங்கும். அதன்பின்னர் ஒரு மாதத்தில் பூக்கள் பூத்து காய்கள் வைக்கும். காய்கள் ஒரு நான்கு நாட்களில் பரித்து விற்பனை கொண்டு செல்லப்படும்.

தற்ேபாது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாக பெய்துவருகிறது. இந்த மழையால் மானூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய் செடிகள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு செடியிலும் அதிகப்படியான பூக்கள், காய்கள் காய்த்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெண்டைகாய் செடிகளில் விளைச்சல் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினமும் செடிகளிலிருந்து அதிகப்படியான வெண்டைக்காய்கள் பறிக்கப்படுகிறது.

இதனால் வெண்டைக்காய் விலை கிலோவுக்கு ரூ.48க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். மேலும் வரக்கூடிய நாட்களில் வெண்டைக்காய் விலை குறைந்து காணப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய உழவர் சந்தையிலும் வெண்டைக்காய் கிலோ ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

The post மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: