திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ் மட்டத்துடன் நிற்கும் பாத்ரூம் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

 

திருவாடானை, மே 25: திருவாடானை பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை கட்டும் பணி கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைவுபடுத்தி கட்டி முடிக்க வேண்டுமான பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். திருவாடானையில் காமராஜர் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு திருச்சி, ராமேஸ்வரம், மதுரை, கோவை, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கும் மற்றும் திருவெற்றியூர் பாகம் பிரியாள கோயில், ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலம், பாசிபட்டினம் தர்கா,

ராமேஸ்வரம் போன்ற முக்கிய ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களும் இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்து தான் செல்ல வேண்டும் இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும் இங்கு வரும் பயணிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கழிப்பறையில் கதவுகள் எதுவும் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. அங்கு சென்றாலே கப் அடிக்கிறது.

இதனால் புதிய கழிப்பறை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் புதிய கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேல் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கழிப்பறை கட்டும் பணியை விரைவுபடுத்தி கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ் மட்டத்துடன் நிற்கும் பாத்ரூம் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: