சிவகாசி, டிச.18: திருவிழாவில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி மலைச்சாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், மகேந்திரபாண்டியன், ஹரிபரத் ஆகியோர் பெண்கள் பகுதியில் நின்று கொண்டு பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை கோவில் நிர்வாகியான மலைச்சாமி கண்டித்துள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சுபாஷ், மலைச்சாமி குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று மலைச்சாமி வீட்டிற்கு சென்ற சுபாஷ், மகேந்திரபாண்டியன், ஹரிபரத் ஆகியோர் உன் மகனை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இது குறித்து அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் சுபாஷ், மகேந்திரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். ஹரிபரத்தை தேடி வருகின்றனர்.
