பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற பான் இந்தியா படத்தின் மேக்கிங் வீடியோவின் 2வது பாகம் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழுவினர், அதன் ஒரு பகுதியாக ‘ஃபிரம் ஸ்க்ராட்ச்’ என்ற பெயரில், படத்தின் முன்தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

இதன் முதல் பாகத்தில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த விஷயங்கள் இடம்பெற்றன. 2ம் பாகத்தில், ‘அசம்பிளிங் தி ரைடர்ஸ்’ என்ற பெயரில், எதிர் நாயகனுக்குரிய சீருடை பட்டாளம் பற்றிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இது இப்படத்தின் விலையுயர்ந்த பகுதி என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைஜெயந்தி மூவிஸ் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால், பொன்விழா படைப்பாக ‘ப்ராஜெக்ட் கே’வை அஸ்வினி தத் தயாரித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். வரும் ஜனவரி 12ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

The post பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: