தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்

திருமலை: தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகினற்னர். நேற்று ஒரே நாளில் 71,510 பேர் சாமி தரிசனம் செய்து ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

டோக்கன் பெறாமல் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால், 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கிருஷ்ண தேஜாவிலிருந்து ஷீலா தோரணம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்தனர்.

திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43,199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.

The post தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Related Stories: