நாளை ஐஎஸ்எல் பைனல் மோகன்பகான்-மும்பை மோதல்

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 10வது தொடருக்கான இறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை சிட்டி எப்சி அணிகள் இன்று களம் காண உள்ளன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 10வது தொடர் கடந்த ஆண்டு செப்.21ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் முதல் இடம் பிடித்த மோகன் பகான், மும்பை அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

கூடவே அடுத்த 4 இடங்களை பிடித்த கோவா, ஒடிஷா, கேரளா, சென்னை அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அவற்றில் சென்னையை வீழ்த்திய ஒடிஷாவும், கேரளாவை வென்ற கோவாவும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன. ஆக லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடித்த மோகன் பகான், மும்பை, ஒடிஷா, கோவா அணிகளே அரையிறுதிக்கு முன்னேறின. அதில் ஒடிஷாவை வெளியேற்றிய மோகன் பகானும், கோவாவை விரட்டிய மும்பையும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளன.

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், முன்னாள் சாம்பியன் மும்பையும் களம் காணுகின்றன. பிரிதம் கோட்டல் தலைமையிலான மோகன் பகான் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இன்று வெற்றிக் கொடியை நாட்ட முனைப்புக் காட்டும். அப்படி வென்றால் மோகன் பகானுக்கு 5வது முறையாக ஐஎஸ்எல் கோப்பை கிடைக்கும்.

அதே நேரத்தில் டெஸ் பக்கிங்காம் தலைமையிலான மும்பையும் 2வதுமுறை சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரம் காட்டும். இந்த 2 அணிகளும் ஏற்கனவே ஒரே ஒரு முறை ஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. அதில் மும்பைதான் வென்று இருக்கிறது. அந்த வரலாறு மாறுமா, தொடருமா நாளை தெரியும்.

நேருக்கு நேர்

* இந்த 2 அணிகளும் ஐஎஸ்எல் தொடர்களில் 9 முறையும், துரந்தோ கோப்பை தொடரில் 2 முறையும் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 6, மோகன் பகான் 2 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. இடையில் 3ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக மும்பை 5-1 என்ற கோல் கணக்கிலும், மோகன் பகான் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியுள்ளன.

* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் மோதிய 2 ஆட்டங்களில் ஒன்றில் மும்பை 2-1 என்ற கோல் கணக்கிலும், மற்றொன்றில் மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கிலும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

The post நாளை ஐஎஸ்எல் பைனல் மோகன்பகான்-மும்பை மோதல் appeared first on Dinakaran.

Related Stories: