ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள டி.பி. சத்திரம் காவல் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

அண்ணாநகர்: சென்னை டி.பி சத்திரம் காவல்நிலையம் கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் 1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கீழ்தளத்தில் போலீசார் ஓய்வு அறைகள், முதல் தளத்தில் சட்டம், ஒழுங்கு காவல் நிலையம், 2ம் தளத்தில் குற்ற பிரிவு காவல் நிலையம், 3ம் தளத்தில் உதவி ஆணையர் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் காவல் நிலையம் திறக்கப்படவில்லை. எனவே காவல்நிலையத்தை சீக்கிரம் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்கு உடனடியாக திறப்பு விழா நடத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

The post ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள டி.பி. சத்திரம் காவல் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா? appeared first on Dinakaran.

Related Stories: