தமாகா வேட்பாளர் பிரசாரம் திமுக வேட்பாளர் பிரகாஷ் உறுதி தமிழ் புத்தாண்டையொட்டி பழக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு, ஏப். 14: ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. தமிழ் மாத சித்திரை பிறப்பை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்வார்கள். சித்திரை 1ம் தேதியான இன்று (14ம் தேதி) தமிழ் புத்தாண்டு சித்திரை கனியாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவில் மக்கள் தங்களது வீடுகளில் பழங்கள், பூக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, ரூபாய் நோட்டுக்களை வைத்து, புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன் வீட்டில் வைத்த பழங்களை பார்த்து வழிபட்டால், ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ஈரோடு மாநகரில் பழக்கடைகளில் மூக்கனிகளான மா, பலா, வாழை, இதுதவிர ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை வியாபாரிகள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். இதனை வாங்க அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதால், விற்பனையும் நேற்று அமோகமாக நடைபெற்றது.

இதில், ஈரோட்டில் நேற்று விற்பனையான பழங்களின் விலை விவரம் (கிலோவில்): ஆப்பிள் ரூ.200- ரூ.250, திராட்சை சீட்லெஸ் ரூ.80- ரூ.110, ஆரஞ்ச் ரூ.100- ரூ.120, சாத்துக்குடி ரூ.60- ரூ.80, மாம்பழம் ரூ.80- ரூ.150, மாதுளை ரூ.120- ரூ.180, அன்னாச்சி ரூ.70, எலுமிச்சை ஒரு கனி ரூ.5 முதல் ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தமாகா வேட்பாளர் பிரசாரம் திமுக வேட்பாளர் பிரகாஷ் உறுதி தமிழ் புத்தாண்டையொட்டி பழக்கடைகளில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: