குளித்தலை ரயில், பஸ் நிலைய பகுதிகளில் வெடிகுண்டு துப்பறியும், அகற்றும் படையினர் ஆய்வு

 

குளித்தலை, ஏப்.7: நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ட்ராங்ரூமில் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நேற்று பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படை உதவி ஆய்வாளர் மணி சேகர், தலைமை காவலர்கள் சதீஷ்,முருகன், ஆகியோர் சோதனை நடத்தினர். நேற்று காலை குளித்தலை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படை குழுவினர் சோதனை செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post குளித்தலை ரயில், பஸ் நிலைய பகுதிகளில் வெடிகுண்டு துப்பறியும், அகற்றும் படையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: