சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் விக்டோரியா டெய்லர்

சார்லஸ்டன்: அமெரிக்கவின் தெற்கு கலிப்போர்னியாவில் சார்லஸ்டன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் 2வது சுற்றில் நேற்று முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை பெலாரசின் விக்டோரியா அசரன்கா(34வயது, 26வது ரேங்க்), இத்தாலி வீராங்கனை எலிசபெத்தா கோக்சியரெட்டோ(23வயது, 56வது ரேங்க்) உடன் மோதினர். அதில் விக்டோரியா ஒரு மணி 10 நிமிடங்களில் 6-1, 6-2 என நேர் செட்களில் எளிதில் வென்று, காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி(33வயது, 126வது ரேங்க்), உக்ரைன் வீராங்கனை அன்ஹேலினா கலினினா(27வயது, 33வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.

அதில் அன்ஹேலினா 6-2, 6-3 என நேர் செட்களில் கரோலினாவை வீழ்த்தினார். ஒரு மணி 20 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி மூலம் அன்ஹேலினா 3வது சுற்றில் விளையாட உள்ளார். முன்னதாக நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்செண்ட்(27வயது, 13வது ரேங்க்) ஒரு மணி 37 நிமிடங்களில் 7-5, 6-2 என நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனை ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா (29வயது, 15வது ரேங்க்)வை வென்றார். அதன் மூலம் டெய்லர் 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

The post சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் விக்டோரியா டெய்லர் appeared first on Dinakaran.

Related Stories: